இலங்கை தொடர்பில் பிரித்தானியா ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடும் – பிரித்தானிய அமைச்சர்..!

372

brஇலங்கையில் நிலவரம் தொடர்பில் தொடர்ந்தும் பிரித்தானியா, பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பொதுநலவாய அலுவலக நாடாளுமன்ற உறுப்பினர் ஹுகோ சுவைர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பின் போது பிரித்தானியா, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது.

இந்தநிலையில் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வின்போதும் பிரித்தானியா, உரிய செயற்பாட்டை வழங்கும் என்று ஹுகோ சுவைர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் போது மனித உரிமைகள் விடயம் தொடர்பில் தெளிவான கொள்கையை வெளிப்படுத்தியதாக ஹுகோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை உரிய விசாரணைகளை நடத்தாது போனால், நவநீதம்பிள்ளையின் சர்வதேச விசாரணை கோரிக்கைக்கு பிரித்தானியாவும் தமது ஒத்துழைப்பை வழங்கும் என்று பிரித்தானிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.