யாழ். கைதடியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது நேற்று இரவு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து தங்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் மீதே கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் குறித்த பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நால்வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளினை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




