சிறுமி மீது பலாத்காரம் : கடற்படை வீரரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய மக்கள்!!

598

abuseஇரண்டாம் வகுப்பில் பயிலும் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கடற்படை வீரரை பிரதேசவாசிகள் பிடித்து கடுமையாக தாக்கி, மரத்தில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் இரண்டாம் வகுப்பில் பயிலும் சிறுமி வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சென்ற கடற்படை வீரர் மலர் ஒன்றை தருவதாக கூறி சிறுமியை ஏமாற்றி அருகில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதை தொடர்பில் பிரதேச வாசிகள் கடற்படை வீரரை பிடித்து கடுமையாக தாக்கியதுடன் மரத்தில் கட்டி வைத்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடுமையாக தாக்கப்பட்டதால் காயமடைந்துள்ள சந்தேக நபர் சிறைச்சாலையின் பாதுகாப்பின் கீழ் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.