கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி ஒருவர் மனைவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தங்க ஆபரணங்களை போன்று போலியான ஆபரணங்களை தயாரித்து அவற்றை வங்கியில் அடகுவைத்து பணம் சம்பாதித்தமை தொடர்பில் கணவன் மற்றும் மனைவிக்கு எதிராக வழக்கொன்று விசாரிக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி இளம் பெண்ணான மனைவியை மட்டும் பிணையில் விடுதலை செய்து கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அன்றையதினம் இரவு பிரதான சந்தேக நபரின் இளம் மனைவியை கம்பளை நகரில் உள்ள விடுதி ஒன்று அழைத்துச் சென்ற நீதிபதி குறித்த பெண்ணை பல முறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இதற்காக அந்த நீதிபதி சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் உதவியையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
நீதிபதி மனைவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதை அறிந்து கொண்ட விளக்கமறியலில் இருந்த கணவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற தினத்தில் நீதிபதி மீது மனித கழிவை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.




