வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனையில் டெங்கு பரவும் அபாயம்!!(படங்கள்)

491

01வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனையில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் வகையில் குப்பை கூழங்கள் காணப்படுவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஏ9 வீதியும் மன்னார் வீதியும் சந்திக்கும் இடத்தில் வவுனியா நகரில் இருந்து 500 மீற்றர் தொலைவில் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனை காணப்படுகின்றது. கர்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் சாதாரண பொதுமக்கள் என பலரும் தினமும் வந்து செல்கின்ற அலுவலகமாக இது இருந்து வருகின்றது.

தேசிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வவுனியாவிலும் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டி டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் குறித்த அலுவவலகமே செயற்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வீடுகளில் சாதாரணமாக நீர் தேங்கக் கூடிய வகையில் தாவரங்கள் நின்றால் கூட சிவப்பு நோட்டீஸ் ஒட்டி தண்டம் அறவிட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஆனால் குறித்த அலுவலகத்தில் நீர் தேங்கக் கூடிய பொருட்கள் பரவலாக காணப்படுவதுடன் வடிகாலும் நீர் வழிந்தோட முடியாது அடைப்பட்டு காணப்படுகின்றது.

இதனால் இங்கு நீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது. இது தவிர இவ் அலுவலக சிற்றுண்டிச்சாலை மற்றும் சுற்றுச் சூழலில் பரவலாக குப்பை கூழங்கள் காணப்படுகின்றன. இதனால் சுகாதாரம் சார் பிரச்சனைகளும் தொற்று நோய்களும் ஏற்பட கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

பொது மக்கள் வீடுகளில் தான் டெங்கு இருக்கும். சுகாதார அதிகாரிகள் பணிமனையில் டெங்கு இருக்காதா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

1 2 3 4 5 6