கனடாவில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் மர்மநபர்கள் : திணறும் பொலிசார்!!

340

திணறும் பொலிசார்

கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொள்ளையர்களின் அட்டகாசம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான ரொரன்டோ, ஒன்டாரியா, மொன்றியல், ஒட்டாவா உள்ளிட்ட பல பகுதிகளில் கொள்கையர் கைவரிசையை காட்டியுள்ளனர்.

நாடோடி கும்பம் ஒன்று கொள்ளைச் சம்பவங்களை நடத்தி விட்டு தப்பிச் செல்வதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாரும் இல்லாத வீடுகளை இலக்கு வைத்து இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. வீட்டு உரிமையாளர்களை வெளியில் அவதானிக்கும் இந்த கும்பல், வீடுகளை உடைத்து பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் கொள்ளையிடுகின்றனர்.

அநேகமான வீட்டு உரிமையாளர்கள் பணிகளில் ஈடுபட்டிருக்கும் முற்பகல் 10.00 முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலான காலப் பகுதியில் அதிகளாவன கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கனடாவில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலரின் வீடுகளும் கொள்ளையர்களின் உடைக்கப்பட்ட கொள்ளையிடப்பட்டுள்ளது. ரொரன்டோவில் கொள்ளைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

தாம் வெளியில் சென்றிருந்த சமயத்தில் வீட்டின் கதவினை நுட்பமான முறையில் உடைந்த திருடர்கள் உள்நுழைந்துள்ளனர். அனைத்து அறைகளையும் சல்லடை போட்ட கொள்ளையர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். சுமார் 30000 டொலர்கள் பெறுமதியான பொருட்களை கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனினும் விரைவில் கண்டுபிடித்து தருவாக பொலிஸார் நம்பிக்கை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.