வெளிநாடு செல்வோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில்ல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் அனைவரும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது,
கடந்த காலங்களில் தனித் தனியாக வெளிநாடு செல்லும் நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள சந்தர்ப்பம் காணப்பட்டது.
எனினும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறு விமான நிலையத்தில் பதிவு செய்ய முடியாது எனவும் அந்த முறைமை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம், காலி, யாழ்ப்பாணம், கண்டி, தம்புள்ள, சிலாபம், கல்முனை, மத்துகம, திருகோணமலை, வவுனியா, குருணாகல், ரத்தினபுரி, மீரிகம, தங்கல்ல மற்றம் கேகாலை ஆகிய பிராந்திய காரியாலயங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




