மேற்குலக நாடுகளை குறை கூறுவதால் பயனில்லை எனவும் நாட்டின் தவறுகளை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இலங்கை ஆயர்கள் சம்மேளனத்தின் மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
இதனை செய்யாது மேற்குலக நாடுகள் மீது குறைக் கூறுவதில் பயனில்லை. எமது தவறுகளை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் சர்வதேச ரீதியில் நாடு அவப்பெயருக்கு உள்ளாகும்.
அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி மாற்றங்களை செய்யாது.
செய்ய போகும் மாற்றங்களை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும் எனவும் பேராயர் குறிப்பிட்டார்.




