வவுனியாவில் நடைபெறவுள்ள நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி நிகழ்வு!!

383

Nelsonநிறவெறி கொள்கைகளிற்கெதிரான போராட்டத்திற்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்திருந்த நெல்சன் மண்டேலாவின் தியாக வாழ்க்கை தென்னாபிரிக்க நாட்டு இளைஞர்களிற்கு மட்டுமல்லாமல் பூமியில் புத்துலகம் காணத்துடிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் இதயகீதமானது.

விடுதலைக்காக இளமை முதல் போர்க்களம் கண்ட மண்டேலா அவரது வளர்ச்சிப்பருவத்தில் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ற் கட்சி தலைவர்களோடு இணைந்து போராடினார். மக்களின் விடுதலைக்காக சிறையை விரும்பி ஏற்றவர். அதிபர் பதவியை இரண்டாம் முறையாக ஏற்க வேண்டும் என உலகமே வற்புறுத்தியபோதும் ஏற்க மறுத்ததன் மூலம் உலக பெரும் தலைவராக உயர்ந்திருந்தவர். இருண்ட கண்டம் ஒளி வீச ஓங்கி ஒலித்த அந்த மனிதநேய சகாப்தம் 05.12.2013 அன்று இறவா காவியமானது.

அம்மாமனிதனை மனித வரலாறு ஒரு போதும் மரணிக்கவிடாது.

உலகத்து மனங்களில் ஒளிவீசும் அழியாக் காவியமான
நெல்சன் மண்டேலாவின் நினைவலைகளை மீட்கவும், துயர் பகிரவும் ஒன்றாக இணைவோம்.

வாருங்கள்….
அறிவோம்….
பகிர்வோம் நெல்சன் மண்டேலாவை….

இடம் : கலாசார மண்டபம், நகரசபை, வவுனியா
காலம் : 14.12.2013 சனிக்கிழமை

நேரம் : காலை 09.00 முதல் நண்பகல் 12.00 வரை