குளியல் தொட்டியில் படுத்தபடி 14 வயது சிறுமி செய்த செயலால் பறிபோன உயிர் : எச்சரிக்கை செய்தி!!

437

எச்சரிக்கை செய்தி

ரஷ்யாவில் குளியல் தொட்டியில் குளித்து கொண்டே சார்ஜில் இருந்த செல்போனை கையில் வைத்திருந்த சிறுமி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Cheboksary நகரை சேர்ந்த யுலியா விசோக்‌ஷயா (14). இவர் தனது வீட்டில் உள்ள குளியல் தொட்டியில் குளித்து கொண்டிருந்த நிலையில் சார்ஜில் இருந்த செல்போனை கையில் வைத்திருந்தார்.

அப்போது செல்போன் யுலியாவின் கையிலிருந்து குளியல் தொட்டிக்குள் விழுந்த போது அவரும் உள்ளே மூழ்கினார். இந்த நேரத்தில் யுலியா மீது மின்சாரமும் தாக்கியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

யுலியாவின் அலறல் சத்தம் கேட்டு அவர் பெற்றோர் அங்கு வந்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் யுலியா உயிரிழந்ததை உறுதி செய்தனர். ரஷ்யாவில் கடந்த ஓராண்டில் மட்டும் யுலியாவையும் சேர்த்து மூன்று சிறுமிகள் குளியல் தொட்டியில் செல்போன் பயன்படுத்தும் போது உயிரிழந்தனர்.

கடந்த டிசம்பரில் இரினா ரிபினிகோவா என்ற 15 வயது சிறுமி, செல்போனில் சார்ஜ் வைத்து கொண்டே குளியல் தொட்டியில் குளித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதே போல கெசினியா என்ற 12 வயது சிறுமியும் தண்ணீர் தொட்டியில் செல்போன் பயன்படுத்திய போது நீரில் மூழ்கி இறந்தார்.

குளியல் தொட்டியில் சிறுமிகள் இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் இது குறித்து பேசிய எலெக்ட்ரானிக்ஸ் பொறியாளர் ஆண்டிரி, குளியலறையில் செல்போனை வைத்து கொண்டு உட்கார்ந்திருப்பது என்பது மிகவும் ஆபத்தானதாகும், யாரும் இது போல இனி செய்யாதீர்கள் என கூறியுள்ளார்.