இலங்கையில் விஷ நோய் பரவ ஐ.நா சபை காரணம் என குற்றச்சாட்டு..!

752

unமர்மமான சிறுநீரக நோய் ஒன்று இலங்கையில் சுமார் ஐந்து லட்சம் மக்களுக்கு பரவக் காரணமாக இருந்ததாக ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் மீது இலங்கையின் சிவில் சமூக அமைப்பு ஒன்று புகார் செய்துள்ளது.

பல்தேசிய நிறுவனங்களின் சார்பில் ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனம், விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனையை ஊக்குவித்ததாக வளர்ச்சிக்கான செயற்பாட்டுக் குழுவான The Swarna Hansa Foundation என்னும் அமைப்பு கூறுகிறது.

அதன் விஷத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐநா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனம் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.



மூன்று வகையான இரசாயனங்களை தாம் தடைசெய்துள்ளதாக இலங்கை விவசாய அமைச்சு கூறியுள்ளது.