என்றும் மாறாத தமிழ் பாரம்பரியம் : புளியம்பொக்கணையில் மடைப்பண்டம் எடுப்பு!!

617

மடைப்பண்டம் எடுப்பு

கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.

இதன்போது பாரம்பரிய முறைப்படி மீசாலை புத்தூர் சந்தி பண்ட மரவடியிலிருந்து மடைப்பண்டம் மாட்டு வண்டிகளில் எடுத்து வருவதற்காக சென்ற தொண்டர்கள் இன்று ஆலயத்தை வந்தடையவுள்ளனர். இதனையடுத்து நாகதம்பிரான் ஆலயத்தின் ஆண்டுக்கான உற்சவ பொங்கல் இன்று வெகு சிறப்பாக நடைபெறள்ளது.

அதிக பக்தர்கள் வருகை தரும் இவ்வாலயத்தின் புனித தன்மை கருதியும், பக்தர்களின் நன்மை கருதியும் பிரதேசத்திற்குள் மதுப்பாவனை மற்றும் பொலித்தீன் பாவனை என்பன முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கருதி 600 இற்கும் மேற்பட்ட பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், பத்து பேர் கொண்ட பொலிஸ் அணியொன்றினையும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.