வடக்கு சுகாதார வசதிகள் குறித்து திருப்தி அடைய முடியாது : சிவசக்தி ஆனந்தன்!!

646

Sivasakthiவடக்கின் சுகாதார வசதிகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையில் பாரியளவில் குறைபாடுகள் காணப்படுகின்றன. போதியளவு வைத்தியர்கள் கிடையாது. தாதியரின் எண்ணிக்கையும் பற்றாக்குறையாகவே காணப்படுகின்றது.

மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட ஏனைய வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. மாகாணத்தில் 335 தாதியருக்கான வெற்றிடம் நிலவி வருகின்றது.

வடக்கு மக்களின் இயல்வு வாழ்க்கையை ஏற்படுத்த சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்