இலங்கையில் ஐந்து லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு : ஐ.நா!!

688

UNஇலங்கையில் ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஆராச்சியாளர்களின் கண்டுப்பிடிப்பின்படி பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் இரசாயன போசனை வகைகளே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களின்படி விவசாயிகள் தமது விவசாய உற்பத்திகளுக்கு பல்வகையான மருந்து வகைகளை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகவே நீரிழிவு நோய் பரவுகிறது.

இதனை தவிர இலங்கை அரசாங்கம் கூறுவதைப்போல இனந்தெரியாத காரணமே இந்த நோய்க்கான காரணம் என்பதை ஐக்கிய நாடுகளின் விவசாய சம்மேளனம் மறுத்துள்ளது.

இலங்கையில் விவசாய உற்பத்தியில் பங்கேற்றுள்ளவர்களில் 20 ஆயிரம் பேர் நீரிழிவு நோயால் இறந்துள்ளனர். 450ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாணத்தில் பரவியிருந்த இந்த நோய் தற்போது தென்பகுதிக்கும் பரவிவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.