வவுனியா தாண்டிக்குளத்தில் ஒலி சமிக்ஞையால் பதற்றம்!!

571

ஒலி சமிக்ஞையால் பதற்றம்

வவுனியா தண்டிக்குளம் புகையிரத கடவையில் உள்ள அபாய மணி ஒலி நேற்று இரவு 7 மணியிலிருந்து 3மணித்தியாலயத்திற்கும் மேலாக ஒலித்த நிலையில் காணப்பட்டதால் அப்பகுதியூடாக பயணிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க நேரிட்டுள்ளதுடன் பலர் பயம் காரணமாக கடவையை கடக்க முயலாமல் காத்து நின்றதையும் அவதானிக்க முடிந்தது .

இதேவேளை இப்புகையிரத கடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவை என்பதுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் இக்கடவையில் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது ரயிலுடன் மோதி பலியாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த புகையிரத கடவையில் இதற்கு முன்னரும் அபாய ஒலி பலமணிநேரம் ஒலித்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் உயிருடன் விளையாடும் புகையிரத திணைக்களம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டு நிற்கின்றனர்.