மாறிய ஊசி மருந்து : பறிபோன பார்வை : இன்று மொத்த மக்களாலும் கொண்டாடப்படும் இளைஞர்!!

897

சாதித்த இளைஞன்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பார்வையை இழந்த இளைஞர் ஒருவர் தற்போது மாவட்ட ஆட்சியர்களுக்கான தேர்வில் வெற்றிபெற்று சாதித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அம்ரோஹா பகுதியில் குடியிருக்கும் சதேந்தர் சிங் குடிமுறை அரசுப் பணிக்கான தேர்வில் ஒட்டுமொத்த இந்தியாவில் 714 ஆம் இடத்தை எட்டியுள்ளார்.

சதேந்தரின் வாழ்க்கை கரடு முரடானது என அவரது நண்பர்களே தெரிவிக்கின்றனர். ஆனாலும் உள்ளத் தூய்மை கொண்ட சதேந்தர் அதை எல்லாம் புன்னகையுடன் எதிர்கொண்டு தற்போது சிகரத்தின் உச்சியில் அமர்ந்துள்ளார்.

சதேந்தருக்கு ஒன்றரை வயது இருக்கும்போது நியூமோனியா காச்சல் பிடிபட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். விதி அங்கே விளையாடியது. சந்தேந்தருக்கு அளித்த ஊசி மருந்து மாறியதால், அதன் தாக்கம் காரணமாக பார்வை குறைப்பாடு ஏற்பட்டுள்ளது.

அது படிப்படியாக சந்தேந்தரை பார்வை இழந்தவராக மாற்றியுள்ளது. தட்டுத்தடுமாறி கல்லூரியில் இணைந்த சந்தேந்தருக்கு இன்னொரு சவால் காத்திருந்தது. கிராமப்பகுதியில் இருந்து கல்லூரிக்கு சென்றதால் ஆங்கில மொழி பேசுவதிலும், புரிந்துகொள்வதிலும் தடுமாறியுள்ளார்.

இதனால் அவருக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவி செய்துள்ளனர். மட்டுமின்றி மென்பொருள் ஒன்றை பயன்படுத்தி சாதாரண மக்கள் வாசிப்பது போன்று அவரும் கல்லூரி பாடங்களை கற்று வந்துள்ளார். பின்னர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இணைந்து அங்கும் தமது திறைமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தம்மை தயார் செய்துகொண்ட சதேந்தர் மூன்றாவது முயற்சியில் தற்போது வெற்றிபெற்றுள்ளார். சதேந்தரின் இந்த வெற்றியை அவரது உறவினர்கள் மட்டுமின்றி அவரது கிராம மக்களே கொண்டாடி வருகின்றனர்.