லட்சக்கணக்கில் சம்பளம் : வேலையை உதறிவிட்டு மக்களுக்காக களத்தில் இறங்கிய ரியல் ஹீரோ : குவியும் பாராட்டுகள்!!

342

ரியல் ஹீரோ

இந்தியாவில் பன்னாட்டு நிறுவனத்தின் வேலையை உதறிவிட்டு இளம் பொறியாளர் ஒருவர், கிராம மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க 10 குளங்களை தூர்வாரி புனரமைத்துள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கவுதம்புத் நகர் மாவட்டத்திலுள்ள கிரேட்டர் நொய்டாவில் ஏராளமான சிறிய அளவிலான குளங்கள் உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுகள் தேங்கும் குட்டைகளாக மாறியுள்ளன.

கிராம மக்களின் குடிநீர் பிரச்னை தீராத ஒன்றாக நீடிக்கவே, அப்பகுதியை சேர்ந்த ராம்வீர் தன்வார் குளங்களை தூர்வார முன்வந்துள்ளார். கிராம மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட அவர், சமூக வலைதளங்கள் மூலமாக தன்னார்வலர்கள் பலரை உடன் சேர்த்து கொண்டு வசூலாகும் நிதியைக் கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு குளங்களை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளார்.

5 ஆண்டுகளில் 10 குளங்களை தூர்வாரியுள்ள 26 வயதான ராம்வீர், பன்னாட்டு நிறுவனத்தில் லட்சகணக்கணக்கான சம்பளத்தில் வேலை செய்து வந்த நிலையில் அந்த வேலையை விட்டுவிட்டு, முழுமூச்சாக இந்த பணியில் இறங்கியுள்ளார். பணத்தேவைக்காக மாலை நேரங்களில் டியூஷன் நடத்தியபடி சமூக சேவை ஆற்றும் ராம்வீருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.