பசில் ராஜபக்ஷ பெயரைக் கூறி நிதி மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்!!

531

Jail-1பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் என்ற போர்வையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாவ – மலலசேகர விசேட விசாரணை பிரிவினர் நேற்று முன்தினம் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி இருவரிடம் 15,00,000 ரூபா நிதி மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து கார் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருக்கு எதிராக நீர்கொழும்பு, நுகேகொட, புதுக்கடை, குளியாபிட்டி, அத்தனகல்ல, கம்பஹா, வத்தளை, குருநாகல் அநுராதபுரம் ஆகிய நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்பட்ட 24 பகிரங்க பிடிவிறாந்துகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்று நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.