மகளின் கொடூர தாக்குதலில் தாய் பரிதாபமாக பலி, தந்தை படுகாயம்!!

417

மகளின் கொடூர தாக்குதல்

கஹவத்த – மடலகம பிரதேசத்தில் யுவதி ஒருவரின் தாக்குதலில் தாயார் உயிரிழந்துள்ளார். இதன்போது தந்தை காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தாயார் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான யுவதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யுவதிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.