மாடு மோதி விபத்துக்குள்ளான நபர் உயிரிழப்பு!!

434

நபர் உயிரிழப்பு

திருகோணமலை, கந்தளாயில் பிரதேசத்தில் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கந்தளாய், பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னால் நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மாடு ஒன்றுடன் மோதி பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் சுய நினைவின்றி அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கந்தளாய், பேராற்றுவெளி பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.சரஸ்தீன் மௌலவி எனும் 62 வயதுடைய ஓய்வு பெற்ற அதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.