ஈபிடிபி கமலேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு!!

703

Kamalendranவட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈபிடிபி மாவட்ட அமைப்பாளருமான க.கமலேந்திரனை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் கே.கமலேந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியனின் கொலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட க.கமலேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த கொலை தொடர்பில் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியனின் மனைவியும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.