ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான ஹட்டன் வீட்டில் இருந்து கத்திகள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அந்த வீட்டில் இருந்து ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினரின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர் இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளார். இந்த நபர் தற்போது ஏமன் நாட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, ஹட்டன் மல்லிகைப்பூ சந்தியில் உள்ள வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். வீட்டில் உள்ள களஞ்சிய அறையில் இந்த கத்திகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 20 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபரை பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.






