முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்!!

619

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக தரிந்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்தது .

நேற்று காலை முதல் குறித்த பகுதியல் இவ்வாறு மோட்டர் சைக்கிள் ஒன்று தரித்த நின்றதாக தெரிவித்து பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

பிற்பகல் 5 மணியளவில் குறித்த மோட்டார் சைக்கிளை உரிமை கோரி வந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.