இலங்கையில் மீண்டும் சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முடக்கம்!!

637

இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு பகுதியில் இரு சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நீர்கொழும்பு பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரையில் பொலிஸ் ஊடரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

மேலும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இன வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துக்களை பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.