
யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் சென்ற பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்துக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு கொள்ளையர்களால் தாலிக்கொடி இழுத்து அறுக்கப்பட்டதால் கழுத்துப்பகுதியில் படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் மகா விஷ்ணு ஆலய கொடியேற்றத் திருவிழாவுக்குச் சென்று கச்சேரி – நல்லூர் வீதியால் நேற்று பிற்பகல் வீடுதிரும்பிய அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இடைமறித்து தாலிக்கொடியை அறுத்தெடுத்து தாலியுடன் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




