
கிளிநொச்சி இரணைமடு சந்தியில் ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு நேர தபால் ரயிலேயே முதியவர் ஒருவர் அகப்பட்டு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இரணைமடு பகுதியை சேர்ந்த இராசேந்திரம் எனும் 62 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்விபத்தினையடுத்து இரயில் பயணம் தாமதமடைந்ததுடன் சடலத்தை மீட்ட இரயில்வே அதிகாரிக்கள் சடலத்தை அடுத்த ரயில் நிலையத்தில் ஒப்படைத்து சென்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




