
அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்ல முற்பட்ட 41 பேர் தென்கடற்பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 41 பேரில், 8 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று மாலை காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்தும் குறித்த குழுவில் இருந்த 4 பெண்கள், தலா ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் எஞ்சிய 29 ஆண்களையும் அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஹர்சன கெக்குனுவெல உத்தரவிட்டுள்ளார்.




