2014ம் ஆண்டை ஜனாதிபதி தேர்தல் ஆண்டாக அறிவிப்பு!!

669

Mahinda2014ம் ஆண்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் ஆண்டாக அறிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டில் சில வேளைகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படக் கூடும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் சேறு பூசும் வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எதிர்வரும் ஆண்டு தேர்தல்கள் நிறைந்த ஆண்டாகவே கருதப்பட வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் தேர்தல்களுக்கு ஆயத்தமாக வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயறக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்வைக்கவில்லை.