ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் இதுவரை 2289 பேர் கைது!!

476

2289 பேர் கைது

தொடர் குண்டுதாக்குதல் இடம்பெற்ற ஏப்ரல் 21ஆம் திகதியிலிருந்து இன்று வரை 2,289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தீவிரவாத செயல்கள் செய்தமை மற்றும் சமூகத்தில் அமைதியின்மையை தோற்றுவித்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 423பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, 211பேர் பொலிஸாரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் 1655 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.