கொழும்பின் வீதியில் நிறுத்தப்பட்ட காரிலிருந்து சடலம் மீட்பு!!

515

காரிலிருந்து சடலம் மீட்பு

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அத்துருகிரிய பிரதேசத்தில் வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் ஆசனத்தில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாலபே கஹன்தோட்டையை சேர்ந்த ராஹுல ஜயசம்பத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.