யாழ்ப்பாணத்தில் நீதிமன்றில் இருந்து தப்பியோடிய பெண் கைதி!!

544

தப்பியோடிய பெண் கைதி

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த பெண் நேற்று மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது குறித்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்தநபர் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து தப்பி ஓடிய குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடிவருகின்றனர். மேலும் குறித்த நபரை கைது செய்ய திறந்த பிடியானை உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.