கணவருடன் சேர முடியாமல் மாதக்கணக்கில் வேறு நாட்டில் தவித்த மனைவி… இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

291

பாகிஸ்தானை சேர்ந்த பெண் மூன்று மாதங்களுக்கு பின்னர் இந்தியாவில் உள்ள தனது கணவருடன் இணைந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்தவர் சுமைரா. இவருக்கும் இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த ஷேக் மொயிதீன் என்பவருக்கும் கடந்த 2011-ல் திருமணம நடைபெற்றது.

தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் நோய் வாய்ப்பட்ட தனது தந்தையை காண தனது பிள்ளைகளுடன் சுமைரா பாகிஸ்தான் சென்றார்.

பிப்ரவரி 27ஆம் திகதி ஹைதராபாத் திரும்ப எமிரேட்ஸ் விமான டிக்கெட்களை சுமைரா எடுத்திருந்த நிலையில் விமான நிலையத்துக்கு வந்து விமானத்தில் ஏறினார்.

ஆனால் அந்த சமயத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாலாகோட் வான்வழி தாக்குதலை இந்திய விமானப்படையினர் நடத்தியிருந்தனர்.

அந்த சமயத்தில் குறித்த விமானத்தில் இந்தியாவுக்கு செல்ல வேறு பயணிகள் இல்லாததால் சுமைரா மற்றும் அவர் குழந்தைகளும் இந்தியா திரும்பமுடியாத சூழல் ஏற்பட்டது.

அதே நேரத்தில் மார்ச் 3ஆம் திகதியோடு சுமைராவின் விசா காலம் முடிவடைந்தது. இதன் காரணமாக இந்தியாவுக்கு வரமுடியாமல் அவர் தவித்தார்.

இதன்பின்னர் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின்னர் சுமைரா மற்றும் அவரின் பிள்ளைகளுக்கு விசா வழங்கப்பட்டது.

இதையடுத்து மூன்று மாதங்கள் கழித்து இந்தியாவுக்கு வந்த சுமைரா ஹைதராபாத் சென்று கணவர் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.