இரண்டு மாதங்களில் 20 கோடி வசூலித்த கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை!!

767

hiகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு மாதங்களில் 20 கோடி ரூபா வசூலிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக துறைமுகம் மற்றும் பெருந் தொருக்கள் திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார்.

இந்த காலப் பகுதியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளன எனவும் அவர் கூறினார்.

தினமும் இந்த வீதியில் சுமார் 15000 வாகனங்கள் பயணம் செய்கின்றன. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.