கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!!

509

துப்பாக்கிச் சூடு

கொழும்பின் புறநகர் பகுதியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஏக்கல – மஹாவத்தை பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பாதாள உலக குழு உறுப்பினர் மினுவாங்கொட களு அஜித் என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்களே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். ஏக்கல – மஹாவத்தை பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.