வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்த கார் : படங்கள்!!

512

ஆற்றில் கவிழ்ந்த கார்

பண்டாரவளை – வெலிமடை வீதியில் திகனதென்ன பாலத்திற்கு அருகில் சிற்றூர்தியொன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று பிற்பகல் பண்டாரவளையில் இருந்து வெலிமடை திசை நோக்கி பயணித்த சிற்றூத்தியே விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்து ஏற்படும் போது சிற்றூர்தியில் சாரதி மாத்திரே இருந்துள்ள நிலையில், அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும் சிற்றூர்திக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வீதியில் காணப்படும் வழுக்கல் தன்மை காரணமாக சிற்றூர்தி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.