சென்னைக்கு சுற்றுலாப் பயணியாக சென்ற இலங்கைப் பெண் : உள்ளாடையை சோதித்த போது அதிர்ந்த அதிகாரிகள்!!

582

இலங்கைப் பெண்

சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்று துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த அதனான் (36), மற்றும் ஷிபியுல் ரகுமான் (25) ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் இருவரும் தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 950 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து இலங்கையை சேர்ந்த சீதாலட்சுமி (63) என்பவர் சுற்றுலா பயணியாக சென்னை வந்தார். அவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவரது உடமைகளில் எதுவும் இல்லை. பின்னர் சீதாலட்சுமியை தனியறைக்கு அழைத்துச் சென்று பெண் அதிகாரிகள் உதவியுடன் சோதனை செய்ததில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து தங்க சங்கிலி மற்றும் பிரேஸ்லெட் ஆகியவற்றை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 131 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த தங்கத்தை யாருக்காக துபாய் மற்றும் கொழும்பில் இருந்து கடத்தி வந்தனர் என 3 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.