வர்த்தகப் பொருளாக மாறியுள்ள நத்தார் தாத்தா : கத்தோலிக்க திருச்சபை கடும் கண்டனம்!!

1019

Sandaநத்தார் தாத்தா தற்பொழுது ஒரு வர்த்தக பொருளாக மாற்றியுள்ளமை தொடர்பில் கத்தோலிக்க திருச் சபை கடும் எதிர்ப்பை வெளியிடுவதக கொழும்பு பேராயரின் ஊடக கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய பெனடிக் ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

புனித நிக்கலஸ் என்ற புனிதரை நினைவுக்கூரும் வகையில், நத்தார் பண்டிகை காலத்தில் தேவாலயங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அலங்கரித்து சிறுவர்களுக்கு பரிசுகளை வழங்குவதற்காக நத்தார் தாத்தா என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டது.

ஆனால் இன்று வர்த்தக நிலையங்களுக்கு அருகிலும் நகரின் முக்கிய இடங்களிலும் நத்தார் தாத்தாவை காணக் கூடியதாக உள்ளது.

இது புனிதரான நிக்கலஸ் அவர்களுக்கு செய்யும் பாரிய அவமதிப்பு எனவும் இதற்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை கடும் அதிருப்தியை வெளியிடுவதாகவும் பெனடிக் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.