சுவிஸில் பாலியல் வழக்கில் கைதாகிய முன்னாள் நாடக ஆசிரியருக்கு 5 வருடம் கடுங்காவல் சிறைதண்டனை விதித்து சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுவிஸில் 44 வயது நிரம்பிய இச்சில்மிஷ மன்னன் கடந்த 10 ஆண்டுகளாக (2000-2012) பருவ வயதுள்ள மாணவிகளுக்கு பலமுறை பாலியல் தொந்தரவளித்து அவர்களை பலாத்காரம் செய்துள்ளார் என ATS செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதுகுறித்து இவ்வாசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் ATS செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், தங்கள் ஆசிரியரின் கோபத்திற்க்கு ஆளாகாமல் இருப்பதற்காக பயந்து அவர் லீலைகலில் சிக்கி தவித்து பலியாகினோம் என்று கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இக்குற்றவாளி கூறுகையில், இவ்வழக்கில் 5 வருடம் கடுங்காவல் சிறைதண்டனை உறுதி செய்யப்பட்ட நான், செய்வது தவறு என அறிந்தும் என்னால் விடமுடியாத காரணத்தால் தொடர்ந்து அத்தவறை மீண்டும், மீண்டும் செய்து வந்தேன் என்றும் அதனால் பாதிப்படைந்த மாணவிகளிடம் மன்னிப்பு கேட்கிறேன் எனவும் கூறியுள்ளார்.




