மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு!!

728

hangதூக்கில் தொங்கிய நிலையில் 19 வயது இளைஞர் ஒருவரது சடலம் நேற்று மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கன்னன்குடா கரையாக்கன்தீவு பகுதியிலிருந்தே இச்சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிராசா டிலான் (19) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வவுணதீவு இது குறித்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.