திரையரங்கில் இரு பெண்களுக்கு குளிர்பானம் கொடுத்து நகைகளை திருடிய நபர்!!

738

kollaiதிருட்டு ராஜாக்கள் (ரஜ ஹொரு) என்ற சிங்கள திரைப்படத்தை பார்க்க இரண்டு பெண்களை அழைத்துச் சென்ற நபர் ஒருவர், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து, அவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

களுத்துறையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 48 மற்றும் 50 வயதான பெண்களிடம் இருந்தே இவ்வாறு பணமும், நகையும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குடிரவரவு குடியகல்வு திணைக்களத்தில் வைத்து இந்த பெண்களுக்கு அறிமுகமானதுடன் இந்த பெண்களுக்கு அந்த நபருக்கும் இடையில் தொடர்புகள் இருந்து வந்துள்ளன.

குறித்த நபரிடம் இருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பொன்றை அடுத்து இந்த பெண்கள் திரைப்படம் பார்க்க சென்றுள்ளனர். படத்தின் இடைவேளையின் போது அந்த நபர் இந்த பெண்களுக்கு குளிர்பானங்களை கொடுத்துள்ளார்.

திரைப்படம் ஓடி முடிந்தும் இரண்டு பெண்கள் தமது ஆசனங்களில் மயங்கி கிடப்பதை திரையரங்கின் தொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்த பின்னர், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்களை நாகொட மருத்துவமனையில் அனுமதித்து்ளளளனர்.

சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய இந்த பெண்கள் பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.