இந்தியாவில் உள்ள புனித பௌத்த தலங்களுக்கு யாத்திரை அழைத்துச் செல்வதாக கூறி 152 பேருக்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி பணத்தை பெற்ற பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
52 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெற்றுள்ளதாக கூறப்படும் இந்த பிக்கு தலைமறைவாகி இருந்ததுடன் சாதாரண உடையில் இருந்த நிலையில் அனுராதபுரம் பிராந்தியத்திற்கான குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான முன்னாள் பிக்கு முகத்தில் மாற்றம் தெரியும் வகையில் மீசை வளர்த்திருந்ததுடன் தலைமுடியையும் வளர்த்திருந்தாக பொலிஸார் தெரிவித்தனர். சூரியவெவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்த 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபா பணம், மோட்டார் சைக்கிள், மூன்று செல்போன்கள், 4 தொலைபேசி சிம் அட்டைகள், கடவூசீட்டை பெறுவதற்காக பிக்குகள் உட்பட ஏனைய நபர்களிடம் இருந்து பெறப்பட்ட 608 புகைப்படங்கள், அடையாள அட்டைகள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.




