மீண்டும் ஒரு போராட்டம் : மக்கள் வெள்ளத்தால் சூழ்ந்த தாய்லாந்து!!

801

Tailandதாய்லாந்தில் மீண்டும் அரசுக்கு எதிரான போராட்டம் நேற்று தொடங்கியது. தாய்லாந்தின் பாங்கொக் நகரத்தில் கடந்த ஒரு மாதகாலமாக எதிர்கட்சிகள் ஊழல் மற்றும் பல குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து தங்கள் பதவியை எதிர்க்கட்சி எம்.பிக்கள் ராஜினாமா செய்தனர், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த பிரதமர் யிங்லக் ஷினவத்ரா முன்வந்தார். இருப்பினும் பிரதமர் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மன்னரின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு நிறுத்தப்பட்டிருந்த போராட்டம் மீண்டும் தொடரும் என அறிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜனநாயகக் கட்சி காலவரையற்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததன் பேரில் தலைநகர் பாங்கொக்கில் ஆயிரக்கணக்கானோர் நேற்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டக்குழுத் தலைவர் தாங்க்ஸ்பான் கூறுகையில், இங்கு நடைபெறும் பேரணி அரசுக்கும், பிரதமருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் 2ஆம் திகதி தேர்தலை நடத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. மேலும், தேசிய சீரமைப்புக்கான திட்டத்தை கடந்த 21ம் திகதி அறிவித்ததுடன் அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.