பட்டப்பகலில் பெண் காவலரை எரித்துக் கொன்ற ஆண் காவலரும் மரணம்!!

497

ஆண் காவலர் மரணம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண் காவலரை எரித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஆண் காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கேரள மாநிலம், மாவேலிக்கரா அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் காவல் அதிகாரியாகப் பணிபுரிந்தவர் சௌமியா. ஆலுவா போக்குவரத்துக் காவலராக பணியாற்றி வந்தவர் அஜாஸ். இவர்கள் இருவரும் திருச்சூர் காவலர் பயிற்சியின்போதே நட்பாக பழகியுள்ளனர்.

மூன்று குழந்தைகளுக்குத் தாயான செளமியாவை திருமணம் செய்யும் ஆசையில் வேறு திருமணமே செய்யாமல் இருந்துள்ளார் அஜாஸ். மட்டுமின்றி செளமியாவின் பணத் தேவைகளுக்கு அஜாஸ் உதவியும் வந்துள்ளார். இந்த நிலையில் சுமார் ஒன்றேகால் லட்சம் ரூபாய் அஜாஸிடம் இருந்து செளமியா கடனாக பெற்றுள்ளார்.

அந்தப் பணத்தை செளமியா திருப்பிக் கொடுத்தபோது வாங்காமல் தன்னைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளார் அஜாஸ். இந்த நிலையில், கடந்த 15 ஆம் திகதி தேர்வு ஒன்று எழுதிவிட்டு தனது பைக்கில் சென்ற செளமியாவை காரால் இடித்த அஜாஸ், பின்னர் அரிவாளால் வெட்டியதுடன், பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தார்.

உயிர் பயத்தில் அலறிய செளமியா பற்றிய நெருப்புடன் அஜாஸை கட்டி அணைத்துள்ளார். இதில் 50 சதவிகிதம் தீக்காயங்களுடன் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார் அஜாஸ்.

அவரிடம் ஆலப்புழா மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார். அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளாததால் செளமியாவைக் கொலை செய்ததாக அஜாஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சிறுநீரகம் இரண்டும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அஜாஸ் மரணமடைந்துள்ளார்.