இன்று காலையில் நடந்த பெரும் சோகம் : தந்தையும் மகளும் பலி : தாயும் மற்றுமொரு மகளும் மீட்பு!!

522

நடந்த பெரும் சோகம்

கிரிந்த – யால கடற்பரப்பில் நீராட சென்ற தந்தை மற்றும் மகள் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தின் போது தாயும் மற்றுமொரு மகளும் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவை சேர்ந்த குடும்பம் ஒன்றே இந்த அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளது. இந்த சோகமான சம்பவம் இன்று காலையில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.