அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை பதவி விலகக் கோரி போராட்டம்!!

587

Thondamanஇலங்கை கால்நடைத்துறை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை பதவி விலக்க வேண்டும் என்று கோரி மில்கோ நிறுவன பணியாளர்கள் கடந்த 20 ம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட்ட ஏனைய கட்சிகளின் தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளன.

ஊழல், சம்பள நிலுவை வழங்கப்படாமை, பணியாளர்களை நிரந்தரமாக்காமை உட்பட்ட பல குற்றச்சாட்;டுக்களை முன்வைத்து அமைச்சர் தொண்டமான், மில்கோ தலைவர் சுனில் விக்கிரமசிங்க, உதவி தலைவர் சஞ்சய லீலாரத்ன ஆகியோரை பதவி விலக்க வேண்டும் என்று கோரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்ச்சியாக கொழும்பு நாரஹன்பிட்டியில் உள்ள மில்கோ நிறுவன தலைமையகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தற்போது நாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.