”த்ரீவீல் ஸ்டார் அபிமான ராத்திரி“ போட்டியில் கிளிநொச்சி இளைஞர் வெற்றி!!

709

kiliஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடாத்திய “த்ரீவீல் ஸ்டார் அபிமான ராத்திரி” பாட்டு போட்டி நிகழ்வில் கிளிநொச்சியைச் சேர்ந்த ரீ.முரளி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

வன்னிப் போரில் கால் மற்றும் கண்களில் அங்கவீனமடைந்த இவர் தனது பாட்டுத் திறமையால் 13 இறுதிப் போட்டியாளர்கள் மத்தியில் இரண்டாவதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தாமரைத் தடாகம் மகிந்த ராஜபக்ச கலையரங்கத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசில்களை வழங்கி வைத்தார்.

இப்போட்டியில் வெற்றியீட்டிய முதல் மூவருக்கும் முச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.