மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி!!

509

விபத்தில் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு, வவுணதீவு – மணற்பிட்டி பிரதான வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். புதுமண்டபத்தடியை சேர்ந்த 62 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி தவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் புதுமண்டபத்தயிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது மோட்டார்சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்பி விட்டு பிரதான வீதிக்கு செல்கையில், பிரதான வீதியால் வேகமாக வந்த மற்றுமோர் மோட்டார்சைக்கிள் மோதியுள்ளது.

இதில் சீனித்தம்பி தவராசா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மற்றைய மோட்டார்சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.