ஸ்பெயினில் குற்றவாளியை கைது செய்ய பொலிசாருக்கு திருடனே உதவி செய்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
ஸ்பெயினில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் ஒருவர் சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இவரது வீட்டில் புகுந்த திருடன் கண்காணிப்பு கமெரா, சில வீடியோ சீடிக்களை திருடிச் சென்றுள்ளான். அதனை போட்டு பார்த்த போது தான் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரியவந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருடன் அனைத்தையும் போட்டு பார்சலை தயார் செய்து மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் போட்டு விட்டான்.
உடனே பொலிசுக்கு போன் செய்து சாலையில் பார்சல் இருப்பதாகவும் அதனை பிரித்து பார்த்தால் உண்மை தெரியவரும் என்றும் கூறியுள்ளான். இதனை பார்த்த பொலிசார் உடனடியாக பயிற்சியாளரின் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்தனர்.
64 வயதான கால்பந்தாட்ட பயிற்சியாளர் பல சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனை பயிற்சியாளரும் ஒப்புக் கொண்டுள்ளார். குற்றவாளியை கைது செய்ய உதவிய திருடனை பொலிசார் தேடி வருகின்றனர்.




