அண்ணனுடன் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

510

நேர்ந்த பரிதாபம்

திருகோணமலை – கண்டி பிரதான வீதியின், பாலம்போட்டாறு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் திருகோணமலை – முத்துநகர், பாலம்போட்டாறு பகுதியை சேர்ந்த சதுன் மதுசங்க (12 வயது) என்பவரே உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்ணனுடன், தம்பியான குறித்த சிறுவன் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பில் அடுத்த கட்ட விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.