உலகிலேயே அதிக வயதான பிறகு குழந்தை பெற்ற முதல் பெண்!!

655

old ladyசீனாவை சேர்ந்தவர் ஷெங்ஹைலின். 60 வயதான இவருக்கு 20 வயதில் ஒரு மகள் இருந்தார். கடந்த 2009ம் ஆண்டில் நடந்த விஷவாயு தாக்குதலில் மரணம் அடைந்தார்.

சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அமலில் உள்ளது. அதனால் அவருக்கு ஒரு மகள் மட்டுமே இருந்தாள். விபத்தில் அவளும் பலியானதால் வயதான காலத்தில் தனிமையில் தவித்தார்.

எனவே வயது முதிர்ந்த காலத்தில் மீண்டும் குழந்தை பெற முடிவு செய்தார். அதற்காக செயற்கை முறையில் கருத்தரித்தார். அதை தொடர்ந்து சமீபத்தில் அவர் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

இதன் மூலம் உலகிலேயே அதிக வயதான பிறகு குழந்தை பெற்ற முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

குழந்தையின் நலன் கருதி வயது முதிர்ந்த பெண்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சை முறையை மேற்கொள்வதில்லை. ஆனால் தனிமை நிலையை கருத்தில் கொண்டு இவருக்கு சிகிச்சை மூலம் மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டது.